Categories
மாநில செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கான அலர்ட்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதனால் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசி வருகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும், நவம்பர் 14 ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும்,நவம்பர் 15 ஆம் தேதி உள் மாவட்டங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |