Categories
பல்சுவை

Youtube-ல் இனி இதை செய்ய முடியாது…. வெளியான புதிய அப்டேட்….!!!

உலகில் பெரும்பாலான மக்கள் இணைய வலைத்தளங்களில் யூடியூப் அதிகம் பயன்படுத்துகின்றனர். கூகுளுக்கு பிறகு யூடியூப் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று இரண்டே பேர்தான் உள்ளனர்.படைப்பாளர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை பொருத்து அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் தற்போது யூடியூப் படைப்பாளர்கள் அதிக அளவு வளர்ந்து வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வெளியிடப்படும் வீடியோக்களில் லைக், டிஸ்லைக், ஷேர், டவுன்லோட், கிரியேட் மற்றும் சேவ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

அந்த வசதிகளில் தற்போது டிஸ் லைக் வசதியில் உள்ள எண்ணிக்கையை பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் புதிய மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிமுகம் படைப்பாளர்களின் வீடியோக்களுக்கு அளிக்கப்படும் டிஸ் லைக் எண்ணிக்கையை குறிவைத்து சிலர் அதனை நிராகரித்து வருவதை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பார்வையாளர்கள் டிஸ் லைக் பட்டனை பார்க்கலாம் என்றும் பயன்படுத்தலாம். ஆனால் எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாது.இதனால் சிறிய படைப்பாளிகள் தாங்கள் புதிய சேனலை தொடங்கிய சமயத்தில் இதுபோன்ற செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |