வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொத்தன்குளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் அடிதடி, கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.