துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தில் நடிகர் பரத் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் .
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ஹே சினாமிகா, தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா, ஹிந்தியில் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், மலையாளத்தில் குருப், சல்யூட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள குருப் படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
Super excited and super happy to be a part of #kurup !! My best wishes to @dulQuer and the entire team !! A perfect cameo as izaakh !! #kurup releasing nov 12th !! pic.twitter.com/mVP3CqK6LM
— bharath niwas (@bharathhere) November 11, 2021
இந்த படத்தில் டொவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் ஷாக்கோ, சுரபி லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃபெரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 12-ஆம் தேதி (நாளை) தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் குருப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள பரத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.