அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலைப் பணியாளர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி, மழைக்கோட் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே அடிப்படை தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், மாநில செயலாளர் செந்தில்நாதன், மாநில பொருளாளர் தமிழ் உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.