வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கரையை கடந்து வலுவிழந்தது. கரையை கடந்த போது 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
Categories