Categories
உலக செய்திகள்

‘உயிர்களிடத்தும் அன்பு காட்டு’…. வாகன ஒட்டி செய்த உதவி…. நன்றி தெரிவித்த உயிரினம்….!!

சாலையை கடக்க முயன்ற விலங்கை வாகன ஒட்டி ஒருவர் அருகில் இருந்த மரத்தில் விட்டுள்ளார்.

உலகில் மிகவும் சோம்பேறியான விலங்கு ஸ்லாத் ஆகும். அதிலும் ‘ஸ்லாத்’ என்பதற்கு சோம்பேறி என்று பொருள். இந்த விலங்கிற்கு அசையா கரடி என்ற பெயரும் உண்டு. மேலும் இது குழந்தையின் குணமுடைய அரிய வகை விலங்காகும். குறிப்பாக இது பிரேசிலில் அதிகளவு காணப்படுகிறது. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள கெய்ராஸ் என்ற பகுதியில் ஸ்லாக் ஒன்று மிகவும் மெதுவாக சாலையை கடக்க முயன்றுள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் அதனை தூக்கி அருகில் இருந்த மரத்தின் மீது விட்டுள்ளார். இதனை அடுத்து மரத்தில் ஏறிய ஸ்லாத்  மெதுவாக தன்னை கைப்பாற்றியவரை நோக்கி கை நீட்டியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த அந்த வாகன ஓட்டியும் கை நீட்டி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

Categories

Tech |