மின்சாரம் தாக்கி ஒலிபெருக்கி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் அந்தோணி செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமண வீடு, கோவில் கொடைவிழா போன்ற இடங்களுக்கு சீரியல் செட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி செல்வன் சமூகரெங்கபுரம் பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் சீரியல் செட் அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தோணி செல்வன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்தோணி செல்வனை உடனடியாக மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அந்தோணி செல்வனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணி செல்வனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.