கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கனமழை காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.