வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கனமழை காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களில் நாளை ஒருநாள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.