Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது..

இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..

அதேபோல  கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டத்தில் நாளை (12ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.. மேலும் சில மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து நாளை காலை மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது..

Categories

Tech |