Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (18.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்றைக்கு கொஞ்சம் வீண் அலைச்சல், வேலைப்பளு ஆகியவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

மாணவர்கள் இன்று அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சக மாணவரின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடுமாற்றம் விலகிச்செல்லும். இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலையும் இன்று உயரும்.

வீண் செலவும் குறையும். பணம் ஓரளவு வந்து சேரும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். காரியங்களும் இன்று சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு மட்டும் கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மன குழப்பம் தீரும் நாளாகவே இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய நாளை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக இருக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவர் யாரும் குறைகூற கூடாது என்பதற்காக உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் உங்களுக்கு வந்து சேரும். காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தாரிடம் கடும் கோபத்தை காட்டாமல் பொறுமையாக பேசுங்கள் அதுபோதும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். வியாபாரம் விரோதம் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களில் வெற்றியும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.

இருந்தாலும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை மட்டும் படியுங்கள் அது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வீண் கவலையும் நீங்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நிச்சயித்த காரியத்தில் மாறுதல்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் தோன்றலாம். ஆதாயம் இல்லாத அலைச்சலால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. கூடுமானவரை கோபப்படாமல் பேசுவது மிகவும் நல்லது. அது மட்டுமில்லை இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். மாற்று இனத்தவர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவார்கள். பயணங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவரின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.

தைரியமாக எந்த காரியத்தையுமே நீங்கள் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கப் பெற்று மனம் மகிழ்வீர்கள். அது மட்டும் இல்லை இன்று நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடமும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று வெளியூர் பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதாவது பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள், அலட்சியம் வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! நினைத்த காரியம் நிறைவேறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் விலகிச்செல்லும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும். இன்று குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக காரியங்களை செய்வீர்கள்.

தடைபட்ட காரியங்கள் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர் என்பதால் உதவிகளை செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி உற்சாகமாகவே இன்று காணப்படுவீர்கள்.

நிம்மதி உண்டாகும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிக்காக வெளியில் செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்றம் சிந்தனை மேலோங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். பொறுப்புகளும் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதே போல விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் நல்ல வாய்ப்புகளும் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகள் குறையும். வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் விலகி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். இன்று ஓரளவு மனம் நிம்மதி ஏற்படும்.

வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையை கடைபிடியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமானை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று விவாதத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஓரளவு விலகிச் செல்லும். வாய்ப்புகள் வாயில் கதவை வந்து தட்டும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் கொஞ்சம் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பீர்கள். பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். பணவரவு கொஞ்சம் கால தாமதமாகத்தான் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி மட்டும் உண்வே உண்ண வேண்டாம். வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு வீண் செலவுகள் இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்கள் மூலம் ஓரளவு அலைச்சல் இருக்கும். உங்களுடைய திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இருந்தாலும் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனமாகவே முடிவெடுங்கள் அது போதும். கூடுமானவரை பெரியவரிடம் ஆலோசனை கேளுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

எந்த காரணத்தைக் கொண்டும் இன்று யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்காதீர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாக்கிகள் வசூலாகி பணவரவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். அதே போல நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதங்கள் நெருப்பு போன்றவற்றைக் கையாளும் பொழுது பொறுமையாகவும் கவனமாகவும் கையாளுங்கள்.

அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். அதனால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் மட்டும் கல்வியில் கவனமாக பாடங்களை படியுங்கள். பாடங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்.

கூடுமானவரை சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இன்பங்கள் இல்லம் தேடிவரும் நாளாக இருக்கும். எதிர்பார்த்த தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கனவு தொல்லைகள் இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கனவு பலிக்கக் கூடிய  கூடிய சூழலும் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறையாக இருங்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துப் பேசுங்கள். கௌரவம் பாதிக்கும் படியான சின்ன சின்ன சூழல்கள் வரக்கூடும். உங்களுடைய பேச்சில் மட்டும் நிதானம் இருந்துவிட்டால் இன்று அனைத்து நல்ல பெயர்களையும் நீங்கள் எடுக்கக்கூடும்.

தொழில் வியாபாரத்தில் நண்பருடன் அனுசரித்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளுமே இன்று தடையின்றி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். அதனால் ஏற்பட்ட மன பயமும் நீங்கும். உபரி பணவரவு கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதே போல காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடம் மாற்றச் சிந்தனை மேலோங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழக் கூடும். நண்பர்களால் சிறு விரயம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகளும் அதனால் வாக்குவாதம் போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் அது போதும்.

சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரிடும். வீண் கவலை கொஞ்சம் இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும். தடைபட்ட காரியங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன்கள் நடந்து முடியும். எந்த ஒரு முயற்சியையும் தயக்கமின்றி செய்யுங்கள். நட்பு வட்டம் பெருகும். நண்பர்களால் முக்கியமான பணியும் நிறைவேறும். உங்களுடைய வசீகரத் தன்மை கூடும். வசீகரத் தன்மை கூடினால் காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் காக்கைக்கு அன்னம் இடுவதையும் இன்று செய்தால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |