Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வயதான முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த முதியவரை கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த வயதான முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. எனவே அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பல்லடம் காவல் நிலையத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |