Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு கோரிக்கைகள் முன் வைப்பு…. விருதுநகரில் பரபரப்பு….!!

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் சட்டமன்ற தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு தேர்தல் மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் நடப்பு மாதமான நவம்பரில் 13, 14 மற்றும் 27,28 தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |