அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் தாசில்தாரான தன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரைப்பட்டி பகுதியில் இருக்கும் சக்கம்மாள் கோவில் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்துவதியது அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அதே பகுதியில் இருக்கும் சாமிராஜ் என்பவர் மணல் கடத்தியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாமிராஜிடம் இருந்த மணலை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.