பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று பாதிக்கும் சூழலிலும் பள்ளிக்கு சென்று வருவதால் அவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி தமிழக அரசு முடிவு ஒன்றை செய்துள்ளது. அதாவது, வழக்கமான நோயெதிர்ப்பு தடுப்பூசிகளை உரிய காலத்தில் மாணவர்களுக்கு செலுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பள்ளிகளிலேயே செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதிலும் முதலில் 5 வயது முதல் 6 வயது வரையுள்ளவர்களுக்கு DPT தடுப்பூசியை (Diphtheria, Pertussis, Tetanus) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ரண ஜன்னி தடுப்பூசி அளிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.