தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தற்பொழுது 10,000 வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களில் 4000 பேர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் 12,000 பேர் தான் தற்பொழுது பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை ஒன்றை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து இவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான சி.செந்தில் குமார் கூறியதில் “பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது அவர்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் கிடையாது. அதிலும் பலர் பணி நிரந்தரம் ஆகாமலே ஓய்வு பெற்றுவிட்டனர். குறிப்பாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதில், இத்துறை ஆசிரியர்கள் பணியானது நிரந்தரமாக்கப்படும்.
மேலும் மாணவர்களின் பயம் போக்கும் விதமாக அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும்” என்ற இனிப்பான செய்தியை அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழக பள்ளி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த ஆங்கில வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன் படி தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் LKG ,UKG வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் மட்டும் LKG ,UKG மாணவர் சேர்க்கைகளை முடித்து வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.