ரிஷபம் ராசி அன்பர்களே..!! கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடுமாற்றம் விலகிச்செல்லும். இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்களுடைய பொருளாதார நிலையும் இன்று உயரும். வீண் செலவும் குறையும். பணம் ஓரளவு வந்து சேரும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். காரியங்களும் இன்று சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு மட்டும் கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மன குழப்பம் தீரும் நாளாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய நாளை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக இருக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்