Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”காதலில் வயப்படுவீர்கள்” எதையும் தயக்கமின்றி செய்யுங்கள் …!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடம் மாற்றச் சிந்தனை மேலோங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழக் கூடும். நண்பர்களால் சிறு விரயம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகளும் அதனால் வாக்குவாதம் போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் அது போதும்.

சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரிடும். வீண் கவலை கொஞ்சம் இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும். தடைபட்ட காரியங்களில் தடைகள் நீங்கி சாதகமான பலன்கள் நடந்து முடியும். எந்த ஒரு முயற்சியையும் தயக்கமின்றி செய்யுங்கள். நட்பு வட்டம் பெருகும். நண்பர்களால் முக்கியமான பணியும் நிறைவேறும். உங்களுடைய வசீகரத் தன்மை கூடும். வசீகரத் தன்மை கூடினால் காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் காக்கைக்கு அன்னம் இடுவதையும் இன்று செய்தால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |