Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய வடிவில் கலக்க வரும் PUBG…!!

இந்திய தகவல்களை சீன நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.

பப்ஜி விளையாட்டு கிராப்ட்டன் என்ற தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் பென்ஸ் என்ற சீன நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுவதால் பப்ஜிக்கும் சேர்த்து தடை மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை இந்திய இளைஞர்களை கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது. இந்திய இளைஞர்களை விட அதிக வருத்தத்தில் கிராப்ட்டன் நிறுவனம் தான் இருக்கிறது.

ஏனெனில் உலகிலேயே அதிகளவில் 17 கோடி பேர் இந்தியாவில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் இந்திய மார்க்கெட்டை பிடிப்பதற்காக டிராக்டர் நிறுவனம் பல வேலைகளில் இறங்கினார்கள். முக்கியமாக தடைக்கு காரணமாக இருந்த சீன நிறுவனத்திடம் இருந்து விலகி தனியாக இந்தியாவிற்கு என பிரத்தியேகமாக பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் ஒரு விளையாட்டை கொண்டுவந்தார்கள். பப்ஜி போன பிறகு ஏக்கத்தில் இருந்த இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக வந்து சேர்ந்தது.

மீண்டும் கிராஃப் டன் தங்களுடைய கால் தடத்தை இந்தியாவில் பதிக்க ஆரம்பித்தார்கள். எனினும் இது இந்தியாவிற்கு என்று தனி விளையாட்டாக இருப்பதால் சில விஷயங்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதற்கு முழு தீர்வாக பப்ஜி நியூ ஸ்டேட் என்ற பெயரில் புது விளையாட்டு வர உள்ளது என்று கடந்த பிப்ரவரியில் கிராப்ட்டன் நிறுவனம் கூறினார்கள்.

அதன்படி இந்தியா உட்பட 200 நாடுகளில் நவம்பர் 11 ஆம் தேதியான இன்று பப்ஜி நியூ ஸ்டேட் கேம் வெளியாகியுள்ளது. இவை பழைய பப்ஜி விளையாட்டு போலவே இருக்குமாம். அதே சமயம் பல புதிய மாற்றங்களுடன் இந்த விளையாட்டு வந்திருக்கிறது. 2051 நடக்கும் நிகழ்வுகள் போல இந்த பப்ஜி கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.5 கோடி முன் பதிவுகளுடன் தன்னுடைய வெற்றியடைய தொடங்கி இருக்கு இந்த புது வகைக் பப்ஜி. இளைஞர்கள் மத்தியில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், பெற்றோர்களை கொஞ்சம் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |