Categories
மாநில செய்திகள்

மழையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் 10 நாட்களுக்குள் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் போய் சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பெய்வது நின்றுவிட்டால் இன்று கொல் தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2649 பெயர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |