தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை சார்பாக கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.விவசாயிகள் தங்கள் பயிர் சேதத்துக்கு காப்பீட்டை நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய மழை வெள்ளத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் இன்சுரன்ஸ்காக விண்ணப்பிப்பது கடினமாக உள்ளது. விஏஓ அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்கள் மற்றும் கால்நடைகளை கவனித்துக்கொண்டே இன்சுரன்ஸ்காக அலைய வேண்டியுள்ளது. எனவே கடைசி தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். அதனால் தேதி குறிப்பிடப்படாமல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் காப்பீடு செய்வதற்கான இசேவை மையங்கள் வருகின்ற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இயங்கும் என்று வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.