Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகம் முழுவதும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த வெள்ள பாதிப்புகளை தற்போது நடந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாகவும்,சமூக வலைத்தள கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. மழைநீர் தேங்கி உள்ள நீர் நிலைகளை வேடிக்கை பார்ப்பது,ஓரமாக நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |