Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை…. அரசு சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |