செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்கள், கடந்த அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்படல, அதனால்தான் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று குற்றச்சாட்டு சொன்னாரு. இந்த நேரத்தில் குறிப்பிடுவது… திரு ஸ்டாலின் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார், திரு மா சுப்பிரமணியன் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார்.
இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? சொல்லுங்க பார்க்கலாம். ஆகவே மாண்புமிகு அம்மாவுடைய அரசு வந்த பிறகுதான் எங்கெங்கெல்லாம் சென்னை மாநகர பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று கண்டறிந்து, அந்த பகுதியில் இருக்கின்ற தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டோம்.
நான் சொன்ன பகுதி எல்லாம் வடிகால் வசதி நிறைவேற்றி இருக்கிறோம். ஆகவே 10 ஆண்டு காலம் திமுக ஸ்டாலின் மேயராக இருந்திருக்கிறார், திரு மா சுப்பிரமணியன் மேயராக இருந்திருக்கிறார், இவருடைய ஆட்சியில் காலத்தில் இந்த பகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அகற்றக் கூடிய சூழ்நிலையும் செய்யவில்லை.
அது மட்டுமில்லாமல் இவர் துணை முதலமைச்சராக இருந்தார், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் அப்படி இருந்தும் கூட இதில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் தான் இப்பொழுது கொளத்தூர் பகுதி உட்பட சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதியில் தேங்கி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
மாண்புமிகு அம்மா அரசு பல்வேறு வகையில் நிதி ஆதாரத்தை திரட்டி எங்கெங்கெல்லாம் தாழ்வான பகுதி இருக்கிறதோ அங்கெல்லாம் கண்டறியப்பட்டு வடிகால் வசதி செய்து கொடுத்து அதன் மூலமாக தண்ணீராக அகற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லை இந்த வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இவர்கள் தூர்வாரி இருக்க வேண்டும், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தூர்வாருவோம்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமில்லை நாங்கள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, அவர்கள் நேரடியாக அங்கே போய் பார்வையிட்டு எந்த வார்டில், எந்த பகுதியில், எந்த வீதியில் தண்ணீர் தேங்கும் என்று கண்டறியப்பட்டு அதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே, மழை பெய்தவுடன் தண்ணீர் அகற்றப்படுகிறது.
ஆனால் இதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் திரு ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு செய்யப்படவில்லை. அதனால் இன்றைய தினம் சென்னை வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.