Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் உயிரிழந்தால் இனி அவரின் மகளுக்கு வேலை….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது மகள்களுக்கு அந்த வேலை வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது மிகப் பெரிய கனவாக இருந்து வருகிறது. படித்து முடித்தவுடன் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர் ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரசு வேலை கிடைப்பது சிரமம் ஆகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் அரசுத்துறையில் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குகிறது.தற்போது அனைத்து மாநிலங்களிலும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் கவலைகளும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது மகன்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் யாரேனும் உயிரிழந்து விட்டால் அவரது வீட்டிலுள்ள மகன்கள் மற்றும் திருமணமாகாத மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது. தற்போது பணியிலிருக்கும் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது திருமணமான மகளுக்கும் அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |