Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லுறாங்க…! கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தா ?எடப்பாடி கேள்வி …!!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி கமிஷன் வாங்கியதாகவும், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 

கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தார்கள். வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு செய்தி. மாண்புமிகு அம்மாவுடைய அரசு செய்த சாதனையை முடக்க அவதூறு செய்தி மூலமாக நாங்கள் செய்த திட்டத்தை முடக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக தான் மழைநீர் வடிகால் வசதி முன்னுரிமை கொடுத்து இருக்கிறோம். இன்றைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக தான் பல்வேறு மாநகராட்சியில், பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல பாபா நகரில் மொத்தம் ரூபாய் 65 கோடி ரூபாயில் பல்வேறு மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுக்க திட்டமிடப்பட்டு, செயல்படுத்த நாங்கள் ஏற்கனவே அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. அதேபோல நீர்றேற்றுதல் இந்த பகுதியில் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் கொண்டு வந்த அந்த திட்டத்தை தான் இப்போது திரு ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார் கொளத்தூர் தொகுதியில் பாபா நகரிலே….

மீட்புப்பணிக்கு தமிழக அரசின் நடவடிக்கை காலம் தாழ்ந்த நடவடிக்கை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மூன்று நாட்களாக பல்வேறு வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று ஏழை எளிய மக்கள் எல்லாம் குழந்தைகளும் கையில் ஏந்தி கொண்டே தான் இருக்கிறார்கள், இறக்கி விட முடியல.

தண்ணீர் எல்லாம் தேங்கி வீட்டிற்குள் நிற்கிறது. ஆகவே இவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அதிகாரிகளும் முன்கூட்டியே நியமிக்கப்பட்டிருந்தால், அந்தந்த பகுதிக்கு சென்று நிவாரண நடவடிக்கை எடுப்பார்கள், இதனால் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு இருக்கும், மக்கள் பாதிக்காமல் இருந்திருப்பார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |