முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் நவம்பர் 14ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கூறி கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது .அதற்கு அடிபணிந்து உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர் மட்டமான 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே அணையை திறந்து விட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் 14ஆம் தேதி காலை 11 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் திரளாக பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.