சென்னையில் மழை பாதிப்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி கனமழை பெய்ய தொடங்கியது.. இந்த கனமழை இன்று முதல் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் தண்ணீர்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.. தமிழக அரசும், மாநகராட்சியும் மழை வெள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது..
இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வைத்த கோரிக்கை வைத்தார்.. இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், சென்னையில் மழை, வெள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசும் மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளது.. நேற்று தான் மழை முடிந்துள்ளது.. நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாநகராட்சிக்கும் அவகாசம் தர வேண்டியது அவசியம்..
மேலும் தமிழக அரசும், மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து மழை பாதித்த பகுதிகளில் பார்வையிட்டு அங்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் தாமாக வந்து விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது..