Categories
உலக செய்திகள்

பயணக் கட்டணம் உயர்வு…. அதிருப்தியில் பொதுமக்கள்…. கார் ஓட்டுனர்களின் கருத்து….!!

காரின் பயண விலையானது உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Uber காரின் பயண விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அதனை அடுத்து தற்பொழுது தான் லண்டனில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் படி பயணக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பரபரப்பான போக்குவரத்தில் செல்வதற்கு பயணக் கட்டணத்தில் இருந்து 25% உயர்த்தப்படும். ஏனெனில் விமான நிலையங்களில் பயணிகளுக்காக  நீண்ட நேரம் காத்திருப்பதால் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சான்றாக  Uber காரில் பயணம் செய்ய வேண்டுமெனில் குறைந்தபட்ச கட்டணம் 5 பவுண்டு ஆகும். ஆனால் தற்பொழுது 5.50 பவுண்டுகள் வசூலிக்கப்படும். அதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு முந்தைய காலத்துடன் தற்பொழுது ஒப்பிடும் போது குறைவான ஓட்டுனர்கள் இருப்பதன் காரணமாகவும் பயணிகளின் அதீத தேவைகளுக்காவும் விலை உயர்ந்துள்ளதாக கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு Uber காரின் தேவை குறைந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் கொரோனா காலகட்டத்தில் வேறு வேலை தேடிச் சென்றுவிட்டனர். இதனால் ஓட்டுனர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இந்த விலை உயர்வினால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Categories

Tech |