சென்னையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த வாலிபர் உதயா கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்… அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றினார்..
பின்னர் அந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சற்றும் யோசிக்காமல் உடனே உதயாவை தனது தோளில் தூக்கி வைத்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.. காவல் ஆய்வாளர் வாலிபரை தோளில் தூக்கிச் சென்றது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
சென்னை கீழ்ப்பாக்கம் மழையில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். செ. சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் பாராட்டினார்கள்.#TNPolice pic.twitter.com/8zUXcG8Yq4
— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 11, 2021
இந்த காவல் ஆய்வாளரை டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.. மேலும் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.. சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செனாய் நகரை சேர்ந்த உதயா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..