Categories
அரசியல்

“என்னப்பா இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டாரு நம்ம ஓபிஎஸ்”…. இவர நம்பலாமா ? வேண்டாமா…? குழப்பத்தில் சசிகலா…!!!

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் பேசிய கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினாலும், ஒரு சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் அதிமுகவிற்குள்  சசிகலாவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு அணிகள் தோன்றியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விவாதம் நடந்து வந்த நிலையில் அதிமுகவின் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் சசிகலா.  இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது சசிகலா தரப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |