தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் சென்னையில் சமாதிகள் நினைவிடங்கள் கட்டுவதை விட்டு விட்டு ராட்சத வடிகால் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்களுக்கு உணவு அளிப்பதை குறையாக கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், உணவளிக்கும் பணியை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.