Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வருடங்களாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, அன்பே வா, பூவே உனக்காக, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Anbe Vaa serial cast crew wiki Time - Labuwiki

இதில் அன்பே வா சீரியலில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் நல்ல இடத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அன்பே வா  சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த இந்த சீரியலின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |