Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி…. தமிழகத்தில் சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் பெற்ற பயிர் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விவசாயிகளை சிறு குறு என பிரிக்க வேண்டாம்.அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒட்டுமொத்த கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

அந்த விசாரணையில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |