உலக கோப்பை அரை இறுதியில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை தனது பேட்டிங் திறமையால் திணறடித்த பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிபிஎஸ் லக்ஷ்மன் பாராட்டியுள்ளார். துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி டி 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள், 67 ரன்கள் எடுத்தார்.
தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாகிஸ்தான் அணி பயிற்சி ஊழியர்கள்,அரையிறுதி போட்டிக்கு முன்பு முஹம்மது ரிஸ்வான் இரண்டு நாட்கள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை கூறினார். இதையடுத்து இக்கட்டான நேரத்தில் தன்னை பற்றி கவலைப்படாமல் நாட்டிற்காக களமிறங்கி விளையாடிய முகமது ரிஸ்வானை பலரும் பாராட்டி வருகின்றனர்.