தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்து தர முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் 9444134000, மாவட்ட வருவாய் அலுவலர் 9445000903, கட்டுப்பாட்டு அறை- 044 27237 107, 044 27237 207, வாட்ஸ்அப் – 93454 40662 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.