தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடலோர முதல் கன்னியாகுமரி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories