கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர் சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து உள்ளதால் மழை ஓரளவு குறைந்துள்ளது. சென்னை சாலைகளில் தேங்கியுள்ள நீரை ராட்சச பம்புகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 44 முகாம்களில் 2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28. 64 லட்சம் பேருக்கு உணவு வழங்கி உள்ளோம்.
தமிழகத்தில் 259 முகாம்களில் 14 ஆயிரத்து 135 பெயரை தங்க வைத்துள்ளோம். நான்கு நாட்கள் மழையை முதல்வர் வெகு சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். 2015 மழை வெள்ளத்தால் 124 பேர் உயிரிழந்தனர். இந்த முறை பலி எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. அதேபோல் 2015 இல் 2718 கால்நடைகள் உயிரிழந்தது. இந்தமுறை 134 கால்நடைகள் உயிரிழந்தது. இதற்க்கு முதல்வரின் உழைப்புதான் காரணம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை திறந்துவிட்டு தண்ணீர் அதிகளவில் வெளியேறாமல் தடுத்துள்ளோம். ஓரிரு நாட்களில் சென்னை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டறிய நமது முதலமைச்சர் பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். இந்த மழை எங்களுக்கு ஒரு அனுபவம். எங்களைப் பொருத்தவரை ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் சேவை செய்ய தயாராக இருப்போம். மழை நின்றபின் மத்திய குழு ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்த புயல் வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அப்படி வந்தால் அதையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.