மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரிக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இசக்கியப்பன் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இசக்கியப்பன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது நெல்லை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மற்றும் பாரதியார் நகர் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர்.