‘லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே தான்’ என பிக்பாஸ் பிரபலம் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதனையடுத்து, இவர் ‘பியார் பிரேமா காதல்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’, போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் நடிகை ரைசா கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரின் ரசிகர் ஒருவர், லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ரைசா, ”லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அதனால் அந்த வாழ்க்கையை நான் கற்பனை செய்து கொள்கிறேன்” என பதிலளித்துள்ளார்.