சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் பழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும்,நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.