பிரிட்டனுக்கு ஆங்கில கால்வாய் வழியே நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்த மக்களில் மூவர் காணாமல்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புலம்பெயர்ந்த மக்கள் காணாமல் போனதை, ஆங்கில கால்வாயும், வட கடலின் கடல்சார் Prefecture-யும் உறுதிப்படுத்தியிருக்கிறது. Prefecture, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஆங்கில துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அதில் இரண்டு நபர்களை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டு விட்டார்கள். இந்த படகில், மேலும் மூவர் இருந்தனர் என்றும் அவர்கள் மாயமானதாகவும் மீதமிருந்த இருவர் கூறியுள்ளனர். எனவே, பிரான்ஸ் கடற்படையினர் தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். தீவிரமாக போராடியும் மூன்று நபர்களை கண்டறிய முடியவில்லை.
எனினும், பிரான்ஸ் கடற்படையினர் கடந்த இரு நாட்களாக தனித்தனியே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஆங்கிலக் கால்வாய் நீரில் 50க்கும் அதிகமானவர்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.