Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகிருந்தது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' | nakkheeran

ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கௌதம் மேனன் மும்பையில் லொகேஷன் பார்க்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |