தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்தில் இன்று வரை 7 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனால் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது மழையின் காரணமாக அடிக்கடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஈடுசெய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இனி வரும் அனைத்து சனிக்கிழமை களும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாட்கள் ஆகும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.