கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது