கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யாரும் செல்ல வேண்டாம் என்று மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.