தனியார் நிதி நிறுவனம் முன்பு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையில் கடன் பெற்று மொபட் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ் தவணை தொகையை சரியாக செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவரது மொபட்டை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் வள்ளியூர் வடக்கு மெயின் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பு தினேஷ் விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அறிவியல் அருகில் இருந்தவர்கள் தினேஷை உடனடியாக மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.