மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழையினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தடுப்பு அணைகள், பாலங்கள் சாலைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
மேலும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையானது ஆறு தினங்களாக தொடர்கிறது. குறிப்பாக சில வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் அவர்களின் உடமைகளை இழந்துள்ளனர். முக்கியமாக அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க தலைவர் கூறியதில் ‘மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதிலும் பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு அந்த இழப்பை சரி செய்யும் விதமாக அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
மேலும் கனமழையால் தங்களது உடமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ5,000 அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். இறுதியாக தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் இருந்து தமிழகம் தப்பித்து விட்டது என்றும் கூறியுள்ளார்.