சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய பள்ளி பயிலும் மாணவி இருக்கின்றார். இதனை அடுத்து வளர்மதியின் நண்பரான ராமலிங்க குமார், வினோத் குமார் ஆகிய 2 பேரும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் வளர்மதி, ராமலிங்க குமார், வினோத் குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியான தனசேகரன் என்பவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அதாவது ராமலிங்க குமார், வினோத் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.